சட்டக்கல்லூரி தலித் மாணவி பலாத்கார கொலை: அதிர்ச்சியூட்டும் பிரேதபரிசோதனை தகவல்


abi| Last Updated: செவ்வாய், 3 மே 2016 (14:39 IST)
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கேரள சட்டக்கல்லூரி மாணவி, கொடுரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளா மாநிலம், பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாணவியின் உடலில் 30 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மாணவியின் தலையிலும், வயிறு பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டுள்ளது, மார்பகம் மற்றும் உறுப்பு பகுதி கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் இச்சம்பவத்தை டெல்லியில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளதாகவும், மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் பெண்கள் அமைப்பினர், குற்றவாளிக்கு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுட்ள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :