1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (07:37 IST)

கேரளாவில் தக்காளி விலை ரூ.160: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் அதன் பின் ஓரளவு விலை கட்டுப்படுத்தப்பட்டு பின் மீண்டும் தற்போது உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் ஒரு கிலோ தக்காளி விலை 160 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மொத்த விலையில் தக்காளி ரூபாய் 120 க்கும் சில்லரை விலையில் தக்காளி ரூபாய் 160 என விற்பனையாகி வருகிறது என்றும் இதனை அடுத்து அம்மாநில அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன