ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?

metro sridharan
ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?
siva| Last Updated: வியாழன், 4 மார்ச் 2021 (21:42 IST)
கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்னர் காட்சிகள் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி தவிர தற்போது பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது

இந்த நிலையில் மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் என்பவர் கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் பாஜக ஆட்சி அமைத்தால் முதல்வர் பொறுப்பை வகிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இன்று கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என மாநில தலைவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் இணைந்த மெட்ரோ ஸ்ரீதரனுக்கு முதல்வர் வேட்பாளரா என்று அக்கட்சியில் ஏற்கனவே உள்ள சீனியர் பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :