1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (13:04 IST)

வேல இல்லனா என்ன? நோய் இல்லாம இருங்க: பினராயி செய்யும் சகல வசதிகள்!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது மக்களுக்காக பல சேவைகளை இலவசமாக வழங்க முடிவெடுத்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதில் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளாவும் உள்ளது. அங்கு முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் மக்களுக்காக பல சேவைகளை முன்கொண்டுவந்துள்ளார். அவற்றில் சில பின்வருமாறு... 
 
1. மாநிலம் முழுவதும் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு, அனைவருக்கும் 20 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். 
2. மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படும். 
3. எல்லா குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச உணவு பொருட்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்படும்.
4. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ரூ.1,000 நிதி உதவி. 
5. முதியோர் பென்ஷன் பெறுபவர்களுக்கு இரண்டு மாத பென்சன் சேர்த்து வழங்கப்படும். 
 
மக்கள் பொது இடங்களுக்கு செல்ல கூடாது என முடக்கப்பட்டாலும், அவர்களுக்கு தேவையானதை எந்த சிக்கலுமின்றி கொண்டு சேர்க்க கேரள அரசு அதீத கவனத்துடன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அங்கு 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.