1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (08:40 IST)

ஜில் ஜில் காஷ்மீர்.. தொடங்கியது சில்லாய் கலான்!!

40 நாட்களுக்கு தொடரும் சில்லாய் கலான் என்ற குளிர்காலம் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது

டிசம்பர் 21 ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு இருக்கப்போகும் சில்லாய் கலான் என்ற குளிர்காலம் ஜம்மு காஷ்மீரில் தொடங்கியது. இந்த குளிர்காலத்தில் இருள் மட்டுமே இருக்கும். அவ்வப்போது மேகமூட்டத்துக்கு இடையே சூரியன் எட்டிப்பார்க்கும். ஏரி, குளம் உள்ளிட்டவை பனியால் சில்லிட்டுப் போகும்.

இதனால் அன்றாட தேவைக்கான பொருட்களை முன்கூட்டியே மக்கள் வாங்கி வைத்துவிடுகிறார்கள். இக்குளிர்காலத்தில் ஃபெரான், கேங்கர், நாம்டா என்ற தரைவிரிப்புகள் தயாராகின்றன. மேலும் கப்பா என்னும் கம்பளியும் தயாராகிறது.

இந்த குளிர்காலம் முடிந்த பிறகு சில்லாய் குர்த் என்னும் பருவகாலம் தொடங்குகிறது. இதில் கடும் குளிர் குறையத் தொடங்கும். இது 20 நாட்கள் நீடிக்கும். பின்பு சில்லாய் பச்சா என்னும் குளிர்காலம் தொடங்கும். இதில் பனிப்பொழிவும் குளிரும் குறைந்து காணப்படும். இறுதியாக மார்ச்சில் குளிர்காலம் முடிவடையும்.