1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:33 IST)

ஷர்மிளா மகன் நிச்சயதார்த்தம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் வாழ்த்து..!

ஆந்திர மாநில முதலமைச்சருக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்தி வரும் அவரது சகோதரி ஷர்மிளா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பதும் அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
 இதனால் ஆந்திர மாநிலத்தில்  அண்ணன் தங்கை அரசியல் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் வேறு குடும்பம் வேறு என்ற நிலையில் ஷர்மிளா மகன் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
 
முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு நேரில் வீட்டுக்கு சென்று ஷர்மிளா அழைப்பு கொடுத்தார் என்பதும் அந்த அழைப்பை ஏற்று ஜெகன்மோகன்ரெட்டி தனது மனைவியுடன் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் அரசியல் என்று வந்துவிட்டால் இருவரும் நேருக்கு நேராக மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva