திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (13:10 IST)

உறவின் உச்சகட்டத்தில் காதலி மரணம் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்

உடலுறவின் போது தனது காதலி மரணமடைந்து குறித்து இஸ்ரேலை சேர்ந்த வாலிபர் விளக்கம் அளித்துள்ளார்.

 
கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலை சேர்ந்த ஓரிரன் யாகோவ்(23) தனது 20 வயது காதலியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். அப்போது மும்பை வந்த ஜோடி, கொலாபா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, மும்பையின் பல பகுதிகளுக்கும் சென்று சுற்றிப்பார்த்துள்ளனர். 
 
அதன்பின் இரவு ஹோட்டலுக்கு திரும்பிய அவர்கள் உறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஓரிரானின் காதலி மூச்சு விட சிரமப்பட்டு படுக்கையிலேயே இறந்து போனார். அவர் திடீரென மயங்கி விட்டதாக கூறி, ஓட்டல் நிர்வாகத்திற்கு ஓரிரான் தகவல் கொடுத்தார். அதன்பின் அப்பெண்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
 
அதாவது, ஓரிரான் அந்த பெண்ணுடன் தீவிரமாக உடல் உறவில் ஈடுபட்ட போது, அவரது கழுத்த இறுக்கமாக பிடித்துள்ளார். அதில், மூச்சு விட சிரமம்ப்பட்டே அவர் இறந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிவந்துள்ளது. 
 
இதுகுறித்து போலீசார் ஓரிரான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், விசா முடிந்து அவர் பல மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு சென்றுவிட்டார். எனவே, அவரை கைது செய்வதில் மும்பை போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை அறிந்த ஓரிரான் சம்பவத்தன்று என்ன நடந்தது என மும்பை போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
 
அன்று இரவு நானும் எனது காதலி பஃவாவும் தீவிரமாக செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அதிக இன்பம் வேண்டும் எனவே எனது கழுத்தில் கை வை என அவள் கூறினாள். எனவே, நானும் அவளது கழுத்தை பிடித்துக்கொண்டு உறவில் ஈடுபட்டேன். அப்போது, கையை எடு என அவள் கூறவே, நான் உடனே கையை எடுத்து விட்டேன். ஆனால், கழுத்தை பிடித்தால்தான் இன்பம் அதிகமாக இருக்கிறது. எனவே, கழுத்தை இறுக்கி பிடி என அவள் கூற நானும் அவ்வாறு செய்து தீவிரமாக செக்ஸில் ஈடுபட்டேன். 
 
அப்போது திடீரென அவள் பேச்சு மூச்சில்லாமல் ஆகிவிட்டாள். இதனால், நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தேன். என் காதலி விரும்பியபடி அவளுக்கு அதிக இன்பம் கொடுக்க வேண்டுமென்றே அவளின் கழுத்தில் கை வைத்தேன். அவளை கொலை செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல” என ஓரிரான் வாக்குமூலம் அளித்துள்ளார்.