செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2022 (10:35 IST)

தாய்லாந்தில் ஐடி வேலை.. ஆசை காட்டி மோசம்! – மியான்மரில் சிக்கிய இந்தியர்கள்!

தாய்லாந்தில் ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 60க்கும் மேற்பட்ட இந்தியர்களை மியான்மருக்கு கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆசைக்காட்டி மோசடி செய்யும் போலி ஏஜெண்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் வேலைக்கு சென்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதாலும், சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம் என்பதாலும் இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல ஆசை காட்டுகின்றனர்.

தாய்லாந்தில் ஐடி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு ஒன்றை நம்பி பல இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களை தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி மியான்மருக்கு கொண்டு சென்று கொடுமைப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சுமார் 60க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில் ஒருநாளைக்கு 15 மணி நேரத்திற்கும் மேல் வேலை வாங்குவதாகவும், உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அடித்து வேலை வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. மியான்மரில் தற்போது ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்தியர்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.