1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India's First Test Seaplane Lands At Ganga Barrage In Rishikesh

இந்தியாவின் முதல் கடல் விமானம்.. நீரில் இருந்து கிளம்பலாம்.. நீரில் தரையிறக்கலாம்..

Rishikesh
இந்தியாவின் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, ரிஷிகேஷில் உள்ள கங்கா தடுப்பணையில் நாட்டின் முதல் வணிகரீதியான கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
 
ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் ஏப்ரல் 6 அன்று இந்த சாதனையை நிகழ்த்தியது. வழக்கமான விமானங்களுக்கு தேவைப்படும் நீண்ட ஓடுதளங்கள் இல்லாமல், நீர்ப்பரப்பிலிருந்தே இந்த விமானம் எளிதாக தரையிறங்கி மீண்டும் வானில் எழும்பியது.
 
கடினமான நிலப்பரப்புகளை கொண்ட இடங்களுக்கு எளிதில் செல்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ அவனி சிங் தெரிவித்துள்ளார். 
 
தற்போது வணிக ரீதியான செயல்பாடுகளுக்கான உரிமத்தை பெற அந்நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய பிரதமரின் தொலைதூர பகுதி இணைப்பு கொள்கையின் ஒரு பகுதியாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
 
முதற்கட்டமாக, லட்சத்தீவுகளில் உள்ள ஐந்து தீவுகளையும், இந்தியாவின் பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தீவுகள், ஆறுகள் மற்றும் கடற்கரை பகுதிகளை அதிகம் கொண்டுள்ள இந்தியாவில், இந்த சேவை பயண நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுலா துறையிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கல்லூரியில் அரியர் வைத்தவருக்கு கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் வேலை.. எப்படி நடந்தது?