திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (16:58 IST)

இன்னும் ஒருசில மணிகள் தான்: கடைசி நேரத்தில் லட்சக் கணக்கில் குவியும் வருமான வரி தாக்கல்!

income tax
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றைய தினம் என்ற நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரமே மீதம் இருப்பதால் கடைசி நேரத்தில் லட்சக்கணக்கில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2022 -23 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கடைசி தினத்தை முன்னிட்டு வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடைசி நேரத்தில் குவிந்து வருவதாகவும் இன்று ஒரே நாளில் லட்சக்கணக்கில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இன்று இரவு 11:59க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் அவசர அவசரமாக பல கடைசி நேரத்தில் தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran