திருமணத்தன்று மாதவிடாய்… மறைத்த மனைவி – விவாகரத்துக் கேட்ட கணவன்!

Last Updated: வியாழன், 24 டிசம்பர் 2020 (17:24 IST)

குஜராத் மாநிலத்தில் கணவர் ஒருவர் விவாகரத்து மனுவில் குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சொல்லி குடும்ப நல நீதிமன்றத்தை அனுகியுள்ளார். அதில் தனது மனைவி குடும்பத்தோடு சேர்ந்து வாழ ஒத்துழைக்க வில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில் திருமணத்தின் போது தனது மனைவி மாதவிடாய் இருந்ததை என்னிடமும் என் தாயிடமும் மறைத்துள்ளார் என்பதையும் ஒரு குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து கோயிலுக்கு புறப்பட்டபோது தான் தங்களிடம் மனைவி உண்மையை கூறினார். இதனால் எனது குடும்பத்தினரின் மத உணர்வு புண்பட்டு விட்டது என அவர் கூறியுள்ளார். கணவரின் இந்த குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :