வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2016 (17:24 IST)

மகள்களை காப்பாற்றுவது எப்படி? கவர்ச்சி நடிகை அட்வைஸ்

மகள்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று மோடியிடம் கற்றுக்கொள்ளுமாறு நவாஸ் ஷெரீப்புக்கு ராக்கி சாவந்த் அட்வைஸ் கூறியுள்ளார்.


 

 
பாகிஸ்தானில் குவாண்டீஸ் பலூச் கொலை அந்நாட்டில் பொரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், இந்திய பிரதமர் மோடி பெண்களை காப்பாறுவதை தன் சொந்த மகள்கள் போல் நினைத்து காப்பாற்றுவதாகவும், அவரிடமிருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
மோடி நமது பிரதமாராக இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். பெண்களை காப்பாற்றுவது என்பதை தனது சொந்த மகள்களை காப்பது என்பது போல. இதை அவர் கொள்கையாகவே வைத்துள்ளார்.
 
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுக்காப்புக்காக பல சட்டத் திருத்தங்களை அவர் கொண்டு வந்துள்ளார். பலூச் தொடர்ந்து சர்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கொல்லப்பட்டாரா அல்லது இந்தியப் பிரபலங்கள் பலரை நேசித்து வந்ததால் கொல்லப்பட்டரா என்பது தெரியவில்லை.
 
பாகிஸ்தானில் ஒரு பெண் தான் விரும்பியவருடன் உறவு வைத்துக்கொள்ள கூட உரிமை இல்லையா?. இந்த விஷயத்தில் நாவாஸ் ஷெரிப் மோடியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.