1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (05:42 IST)

என்னை தூக்கில் போட்டாலும் 'பத்மாவத்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பேன்: பாஜக பிரமுகர்

தீபிகா படுகோனே நடித்த 'ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பத்மாவத்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று சுப்ரீம் கோர்ட் விடுவித்திருந்த நிலையிலும் அந்த படத்திற்கு இன்னும் எதிர்ப்புகள் குறையவில்லை

வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் பாஜக பிரமுகர் சூரஜ் பால் அமு என்பவர் இந்த படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். சுப்ரீம் கோர்ட் தடையை விலக்கினாலும், என்னை தூக்கில் போட்டாலும் பத்மாவத்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டேன்' என்று அவர் கூறியுள்ளார். மேலும் பத்மாவத் படத்தை திரையிடும் திரையரங்குகள் தீயிட்டு கொளுத்தப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது.

இவர் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'பத்மாவத்' பட இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலியின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.