வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (17:10 IST)

பசு மாட்டு கோமியத்தில் தங்கம்

பசு மாட்டு கோமியத்தில் தங்கம் கலந்திருப்பதாக குஜராத் மாநில ஆய்வாளர்கள் அதிசய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


 

 
குஜராத் ஜூனாகத் வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பசுவின் கோமியத்தில் கலந்திருக்கும் மூலப்பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர்.
 
இதற்காக கிர் என்ற இனத்தைச் சேர்ந்த 400 பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்து வந்தனர். அதில் 1 லிட்டர் கோமியத்தில் 3 மி.கி முதல் 10 மி.கி வரை தங்கத்தின் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
சரியான வேதியல் பகுப்பாய்வின் மூலம் கோமியத்தில் கலந்திருக்கும் தங்கத்தை உலோகமாக மாற்றலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆய்வு குழுவின் தலைவர் கோலக்கியா தெரிவித்துள்ளார். 
 
மேலும் பசுவின் கோமியத்தில் 5100 கலவைகள் இணைந்துள்ளதாகவும், அதில் 338 கலவைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் கொண்டவையாகவும் இருப்பதாக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.