ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:55 IST)

முதலாளி வீட்டிலேயே கைவைத்த தொழிலாளர்கள்… எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!

தெலங்கானாவில் தங்களை வேலையை விட்டு நீக்கிய முதலாளி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ளனர் அவரது வீட்டில் வேலை செய்த பணியாளர்கள்.

தெலங்கானாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசாரூதின் அகமது. இவரிடம் முகமத் அஷ்வத்  என்பவர் ஓட்டுனராகவும், மிஸ்ரா அஸ்வஷ்க் என்பவர் வீட்டு வேலையாளாகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று அசாருதீன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் திருடு போயுள்ளது. அதுபற்றி விசாரித்த போது டிரைவர் மற்றும் வீட்டு வேலையாள் ஆகிய இருவரும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு அந்த பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த விசாரணையில் அசாருதீன் திடீரென அவரை வேலையை விட்டு நீக்கியதால் அவரை பழிவாங்க இந்த வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.18 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.