கூடா நட்பால் 42 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞன்


Abimukatheesh| Last Modified செவ்வாய், 3 மே 2016 (19:05 IST)
டெல்லி மாதங்கிர் பகுதியை சேர்ந்த தீபக் என்ற 21 வயது இளைஞர் ஒருவர் அவரின் வீட்டின் அருகே நான்கு பேரால் 42 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

 
 
கொலை செய்யப்பட்ட தீபக்கின் தந்தை அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கொலை செய்யப்பட்ட தீபக்கின் அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது தீபக் இரத்த வெள்ளத்தில் கிடந்தூள்ளார். தீபக்கின் உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.
 
உடனே காவல் துறைக்கு தெரிவித்துவிட்டு, தீபக்கை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் தீபக் மருத்துவமைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
 
தீபக்குக்கும் அவனது நண்பர்களுடன் இடையே பணம் குறித்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் நண்பர்களால் தீபக் கொலை செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி தனது முதல் கட்ட விசாரணையில் மூலம் கூறினார்.
 
தீபக்கின் நண்பர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததால் அவர்களுடனான சந்திப்புக்கு தான் தடை விதித்ததாக தீபக்கின் தந்தை கூறினார்.
 
மேலும், கடந்த மாதம் தான் தீபக் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :