கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி!
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது
இதுவரை மத்திய அரசு நேரடியாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது
இதன்மூலம் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள முடியும். எனினும் மெடிக்கல் ஷாப்களில் கோவேக்சின், கோவிஷீல்டுதடுப்பூசி கிடைக்குமா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. இந்த தடுப்பூசியின் விலை 500 ரூபாயாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது