வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (18:22 IST)

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல்

Reservation
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran