வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 செப்டம்பர் 2025 (08:05 IST)

வழக்கம்போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை.. பொதுமக்கள் அதிருப்தி..!

வழக்கம்போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை.. பொதுமக்கள் அதிருப்தி..!
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
 
புதிய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹51.50 குறைந்துள்ளது. இதனால், இதன் புதிய விலை ₹1,580 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, வணிக நிறுவனங்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
 
அதே சமயம், பொதுமக்களால் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, கடந்த மாத விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva