1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (10:18 IST)

நாங்க சொன்னத செய்யல.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியம் நிறுத்தம்! – அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிறுவனங்கள்!

Hero scooter
மத்திய அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததாக மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டை அதிகரிக்க அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இந்த மானியத்தை பெற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் தங்களது உதிரி பாகங்களில் பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் சில நிறுவனங்கள் பின்பற்றாததாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.


இதனால் இந்தியாவில் எலெக்ட்ரானிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினாவா நிறுவனங்களுக்கான மத்திய அரசின் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆம்பியர், ரிவோல்ட், ஒகாயா நிறுவனங்களும் மத்திய அரசின் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிறுவனங்கள் தாங்கள் உள்ளூர் உதிரி பாகங்களை பயன்படுத்துவதை நிரூபித்தால் மானியத்தை திரும்ப பெற தகுதி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.