வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (18:17 IST)

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

Tirupathi Laddu
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தொடர்பான நெய்யில் ஏற்பட்ட மோசடி தற்போது பெரும் விவாதத்துக்கிடையே உள்ளது.
 
இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட சிபிஐ விசாரணையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதில், கோவில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட நெய்யாக பாமாயிலை கலந்ததாகவும், அதை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலே பாபா டெய்ரி நிறுவனம் வினியோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.
 
இந்த நிறுவனம் ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தால் கருப்பு பட்டியலில்   சேர்க்கப்பட்டதால், நேரடி ஒப்பந்தம் பெற முடியாத சூழ்நிலையில், ஏ.ஆர். டெய்ரி என்ற புதிய பெயரில் மோசடியாக ஒப்பந்தம் பெற்று நெய் வழங்கியது தெரியவந்துள்ளது.
 
இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ சிலரை கைது செய்துள்ளதுடன், அவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எதிராக, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
 
இந்த விவகாரம் திருப்பதி தேவஸ்தானத்தின் நம்பகத்தன்மையை சோதிக்கக்கூடியதாகவும், பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும்தான் கருதப்படுகிறது.
 
 
Edited by Mahendran