கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்ளலாமா?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 30 ஜூலை 2021 (11:25 IST)
ஒரு நபர் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் ஓய்ந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் கொரோனா வேரியண்டுகள் வேகமாக உருமாறி வருவதால் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான பாதிப்பும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது ஒரே தடுப்பூசியாக போட்டுக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. 
 
எனவே, ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா என ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :