ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (09:06 IST)

ஏஐ தொழில்நுட்பத்தால் கால் சென்டர் பணிகளுக்கு ஆபத்து? - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!

AI technology
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக கால்சென்டர், பிபிஓ துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு குறையும் என்று 2023 - 24 பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த துறையின் வளர்ச்சி காரணமாக மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு மிகப் பெரிய அளவில் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம், மனிதர்களின் வேலைவாய்ப்பை பெரிய அளவில் பாதிக்காது என்றும் மனிதர்களின் வேலையை குறைக்கவே அது பயன்படும் என்றும் மனிதர்கள் இல்லாமல் இருப்பதால் ஒருபோதும் ஏஐ தனித்து வேலை செய்ய முடியாது என்றும் இன்னொரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் சில துறைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் 2024-25 பொருளாதார ஆய்வு அறிக்கையில் ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு விரைவான வளர்ச்சி காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் பிபிஓ, கால்சென்டர் துறைகளில் வேலை வாய்ப்பு கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva