திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (17:52 IST)

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்!

கேரள மாநிலம் திருச்சூரில் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியில் வசித்து வந்தவர்  நீது(22).  அதே பகுதியில் வட கோட்டையைச் சேர்ந்த இளைஞர் நிதிஷ்( 24). நீதுவை ஒரு தலையாகக் காதலித்துவந்துள்ளார் நிதிஷ்.
மேலும் தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து அப்பெண்ணுக்குத் தொந்தரவு தந்துள்ளார் நிதிஷ். ஆனால் நீது இதற்கு மறுத்துள்ளார்.
 
இந்நிலையில் நிதிஸ் இன்று காலை வேளையில் நீதுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.  அப்போதும் தன்னைக் காதலிக்கும் படி கூறியுள்ளார். அங்கு அப்பெண்ணின் பெற்றோரும் உடன் இருந்துள்ளனர்.
 
இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த நிதிஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை வேகமாக எடுத்து நீதுவின் உடலில் ஊற்றியுள்ளார். இந்த விபரீதத்தை உணர்ந்து நீது தப்பிச் செல்வதற்கு முன்பாகவே அவர் மீது பட்டென தீ பற்றவைத்தார்.
 
பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அருகில் பெற்றோரும் அருகில் உள்ளவர்களும் வந்து தீயை அணைக்கும் முயற்சிய்ல் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் நீது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கருகிய நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 
பின்னர் நிதிஷை பிடித்த பொதுமக்கள் திருச்சூர் போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.