1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 மே 2021 (09:25 IST)

7 பேர் விடுதலை… சுப்ரமண்யசுவாமி குடியரசுத் தலைவருக்கு கண்டனம்!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி ராஜீவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் குடியரசுத்தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்ரமண்ய சுவாமி அவர்களை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையினரை விடுதலைப் புலிகள் கொன்றனர். அந்த அமைப்புதான் ராஜீவ் காந்தியை கொலை செய்தது. அந்த படுகொலையில் தொடர்புள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது. அவர்கள் சாகும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.