தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!
- ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!
- கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!
- கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?
- ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!
சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!
தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததால், ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், 7 மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கிரோடி லால் மீனா கூறியிருந்தார்.
அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.
கிரோடி லால் அலுவலகத்துக்கு வராததால் அவர் துறை சார்ந்த பட்ஜெட் திட்டங்களை இறுதி செய்வதில் தாமதம் ஆனது. இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
10 நாட்களுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை கிரோடி லால் மீனா கொடுத்துவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.
