கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி சொன்ன ஐடியா! – ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நாடுகள்!

Prasanth Karthick| Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:46 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி வழங்கிய ஆலோசனைக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில் ஆசிய மண்டலத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். இதில் பாகிஸ்தான், பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளின் சுகாதாரத்துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய பிரதமர் இந்த நாடுகளுக்கிடையே மருத்துவ உதவிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு விசா வழங்குதல், மண்டல் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைகள், கொரோனா ஆய்வு மண்டலம் உருவாக்குதல் போன்ற திட்டங்களை முன்வைத்துள்ளார்.

அதை ஏற்றுக்கொண்ட அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் இந்த திட்டங்களுக்காக பிரதமர் மோடியை பாராட்டியுள்ளதுடன், இவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் இணைந்து மேற்கொள்ளவும் முன்மொழிந்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :