வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (09:11 IST)

மீண்டும் சர்ஜிக்கல் அட்டாக்: மோடி அரசின் அதிரடி

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. இந்த தாக்குதல் சர்ஜிக்கல் அட்டாக் என்று கூறப்பட்டதோடு, எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அட்டாக்கின் வீடியோவும் சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.
 
இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சர்ஜிக்கல் அட்டாக் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று அதிகாலை மியான்மர் நாட்டிற்குள் நுழைந்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாக தெரிகிறது 
 
நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாகவும், மியான்மருக்குள் சுமார் 3 கி.மீ நுழைந்து  இந்திய ராணுவம் இந்த சர்ஜிகல் அட்டாக்கை நடத்தியதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோடி அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது