திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (10:47 IST)

பாட்டி உங்கள புதைச்சிட்டோமே..! உயிருடன் வந்த பாட்டி! – ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில் கொரோனாவால் இறந்ததாக மூதாட்டி புதைக்கப்பட்ட நிலையில் மறுநாள் அவர் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி கிரிஜம்மா. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிஜம்மா அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. உறவினர்கள் முன்னிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சில நாட்கள் கழித்து திடீரென வீட்டிற்கு வந்த கிரிஜம்மா தான் கொரோனாவிலிருந்து குணமாகி விட்டதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். அவரை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிரிஜம்மாவுக்கு பதிலாக வேறொருவர் உடல் தவறாக ஒப்படைக்கப்பட்டதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.