ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:25 IST)

அமித்ஷாவின் தனியாக ஒன்றரை மணி நேரம் பேசிய ஈபிஎஸ்.. என்ன பேசினார்கள்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டெல்லி சென்ற நிலையில் அங்கு அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
குறிப்பாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களை அவர் இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளதாகவும் முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பின்போது அதிமுகவின் மூத்த தலைவர்களை யாரும் யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாக சந்தித்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 
 
அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு நாளில் ஒரு சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva