ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (09:21 IST)

5 லட்சத்திற்காக மனைவியை விற்க முயன்ற கணவன்

ஆந்திராவில் 5 லட்சத்திற்காக கட்டின மனைவியை அவரது கணவணே விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச்  சேர்ந்த மத்திலெட்டிக்கு ஒரு மனைவியும், 4 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தைகளும் உள்ளது. மதுபோதைக்கு அடிமையான மத்திலெட்டி பல்வேறு இடங்களில் கடன்களை பெற்றுள்ளார். கணவனின் மதுப்பழக்கத்தால் அவரது மனைவி, மத்திலெட்டியை விட்டுவிட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 
 
கொடூரத்தின் உச்சமாய்  கடன் பிரச்சினைகளை தீர்க்க மனைவி மற்றும் குழந்தைகளை விற்க முடிவு செய்த மத்திலெட்டி, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு விற்க தனது அண்ணனிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அவரது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மத்திலெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.