திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 டிசம்பர் 2022 (09:41 IST)

3 நாட்களில் 39 பேர்..வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் பரவு கொரோனா!

corona
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் காரணமாக மூன்று நாட்களில் 39 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சீனா ஹாங்காங் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த பயணிகள் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
நேற்று சீனாவில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva