வார வாரம் 32 பெண்கள் மாயம்: என்ன நடக்குது யோகி ஆட்சியில்?
உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. இந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. ஆனால், அரசோ இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாய் தெரியவில்லை.
இந்நிலையில், தகவல் உரிமை சட்டத்தின் படி பதில் அளித்துள்ள மாநில குற்ற பதிவு ஆணையம் ஒவ்வொரு வாரமும் 32 பெண்கள் காணாமல் போகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 75 மாவட்டங்களில் இளம்பெண்கள் காணாமல் போனதாக 1,675 வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். 2018 ஆம் ஆண்டில் கடந்த 3 மாதங்களில் 435 பெண்கள் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது.
ஆனால், எஃப்.ஐ.ஆர் பதிவைவிட காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், முறையாக எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் பல பெண்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.