தமிழகத்தின் தென்கோடி நகரமாம் நெல்லைச் சீமையில் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து, கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட குற்றத்திற்காக ஆங்கிலேயே கலெக்டரால் தூக்கிலிடப்பட்டு, உயிர்த் தியாகம் செய்த பாண்டிய மன்னன் கட்டபொம்மனின் வீரத்தை எவரும் மறுக்கவும் முடியாது, மறந்திருக்கவும் இயலாது.