வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:40 IST)

மீண்டும் உச்சம் சென்ற சென்செக்ஸ்.. 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

share
கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை மோசமாக சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் இந்த வாரம் நேற்றும் இன்றும் பங்குச்சந்தை மீண்டும் உச்சத்திற்கு சென்று வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று சுமார் 300 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச்சந்தையின் சென்செக்ஸ், சற்றுமுன் பங்குவர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் குஷியில் உள்ளனர் 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் 60 ஆயிரத்தை சென்செக்ஸ் நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த வாரம் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இந்த வாரம் மீண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.