மஷ்ரூம் ஆம்லெட்

Webdunia|
நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த மஷ்ரூம் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம்.

தேவையானவை

முட்டை - 3
காளான் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சாட் மசாலா - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை:
ஒரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில், வெண்ணெயை போட்டு உருகியதும், காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி, மறுபடியும் நன்கு கிளறவும்.

அடுப்பில் தவா வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து, பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட் மசாலாவை தூவி, மடக்கி பரிமாறவும்


இதில் மேலும் படிக்கவும் :