பலாப்பழ தோசை

Mahalakshmi| Last Updated: செவ்வாய், 28 ஜூலை 2015 (11:37 IST)
தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - 1 கப்
ஏலக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி

பலாப்பழ துண்டுகள் - 2 கப்

வெல்லத்தூள் - 1 கப்

நெய் - தேவையான அளவு


செய்முறை:

முதலில் அரிசியை ஆறு மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை உரலில் போட்டு ரவை போன்று அரைத்து கொள்ளவும்.

பிறகு வெல்லத்தையும், பலா பழத்துண்டுகளையும் உரலில் மையாக அரைக்கவும். இவற்றை அரிசிமாவுடன் நன்றாக சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். அதில் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கொண்டு அசத்தலாம்.

அரை மணி நேரம் கழித்து, தோசை கல்லில், நெய் விட்டு தோசை போல் வார்த்து எடுத்துக் கொண்டு பரிமாறினால் ருசியான தோசை ரெடி.


இதில் மேலும் படிக்கவும் :