சமையலை‌ப் ப‌ற்‌றிய ரக‌சிய‌ங்க‌ள்

Mahalakshmi| Last Modified வியாழன், 30 ஜூலை 2015 (08:26 IST)
இ‌ங்கு நா‌ங்க‌ள் கூ‌றிய ரக‌சிய‌ங்க‌ள் எ‌ன்பது பலரு‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம். ஆனா‌ல்தெ‌ரியாதவ‌‌ர்களு‌ம் இரு‌க்க‌த்தானே செ‌ய்வா‌ர்க‌ள்.
அவ‌ர்களு‌க்காக இது.

இட்லி‌க்கு வாசனை தூக்கலாக வேண்டுமானால் குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி, எலுமிச்சம்பழத் தோல் போ‌டலா‌ம். கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

சமைக்கும் போது காய்கறிகள் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும். சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும்.

முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம்மாவையும் சேர்த்து ஆம்லேட் தயாரி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். சுவையாக இரு‌க்கு‌ம். கோழி‌க் க‌றி‌யி‌ல் மஞ்சள் பொடி தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் துர் நாற்றம் போகு‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :