திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:02 IST)

திமுக காங்கிரஸ் இடையே இறுதி ஒப்பந்தம்.! 13 ஆம் தேதி கையெழுத்தாக வாய்ப்பு.!!

karga
திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகிற 13-ஆம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
dmk congress
அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன், திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரும் 13ம் தேதி  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வருகிறார். அன்றைய தினம் மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.