1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (18:14 IST)

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி..! பேச்சுவார்த்தையில் சுமூகம்..! தேமுதிக அவைத் தலைவர்.!!

dmdk admk
மக்களவைத் தேர்தலில் அதிமுக உடனான பேச்சுவார்த்தை  சுமூகமாக நடைபெற்றதாக தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
 
நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதன்படி பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஒரு ராஜ்ய சபா சீட், 7 மக்களை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி இருந்தது. இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சமூக முடிவு வெட்டப்படவில்லை.
 
இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிக கேட்கிறது. 
 
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவை தலைவர் இளங்கோவன், மக்களவைத் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.


தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது தொகுதிகள் எண்ணிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்றும் இளங்கோவன் கூறினார்.