பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சாலையில் என்ன செய்தார் தெரியுமா?

raja
Last Updated: ஞாயிறு, 31 மார்ச் 2019 (13:20 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எச்.ராஜா தனது காரிலேயே பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சங்கராபுரம் சங்கம் திடல் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் விழுந்தது.
 
காரில் பயணித்த 5 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். அப்போது அவழியே தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கை நோக்கிக் காரில்  சென்று கொண்டிருந்த எச்.ராஜா இவ்விபத்து நிகழ்ந்த இடத்துக்கு வந்தார்.
 
உடனே காயமடைந்தவர்களை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :