ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:59 IST)

பானை பிரச்சசையால் வெடித்த கலவரம்: அரியலூரில் பெரும் பதற்றம்....

அரியலூரில் விசிகவின் பானை சின்னத்தை உடைத்ததால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 மணி நிலவரப்படி 55.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின்  பானையை வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் தெருவில் போட்டு உடைத்துள்ளனர்.
 
இதனால் அங்கு போராட்டம் வெடித்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டது. இதையடுத்து அங்கு 100க்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.