இதிலேயும் இந்தியர்கள்தான் முதலிடமா?

வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்


Murugan| Last Updated: செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (16:59 IST)
வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளதாகவும், இந்தியர்கள்தான் வாட்ஸ்அப்-ஐ அதிகம் பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 
வாட்ஸ்அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு ரூ.1.3 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியது. தற்போது கோடிக்கணக்கான குழுக்கள் வாட்ஸ்-அப்பில் இயங்கி வருகிறது. தினமும் 42 பில்லியன் எஸ்.எம்.எஸ் களும், 1.6 பில்லியன் புகைப்படங்களும், 250 மில்லியன் வீடியோகக்ளும் வாட்ஸ் அப் மூலம் பரிமாறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முக்கியமாக, இந்தியாவில்தான் அதிமான குழுக்கள் வாட்ஸ் அப்பில் செயல் படுவதாகவும், ஏராளமான புகைப்படங்கள் ஷேர் செய்யப்படுவதாகவும் வாட்ஸ்-அப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் கவோம் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :