ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (11:15 IST)

ஸ்பீடா போனா அபராதம்! தப்பிக்க கூகிள் மேப் செய்த செம ட்ரிக்!

G Maps
சமீபமாக வேகமாக வாகனம் ஓட்டினால் ஆட்டோமேட்டிக்காக அபராதம் விதிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது பல இடங்களில்..அதுபோல பல பகுதிகளில் வேக உச்சவரம்பு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் அடிக்கடி அபராதத்திற்கு உள்ளாகி வருகின்றது. சமீபத்தில் சென்னை மாநகரிலும் வேகக்கட்டுப்பாடு விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரித்து வருகிறது.

இது வாகன ஓட்டிகளுக்கும் தலைவலியாக மாறி வரும் நிலையில் அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகிள் மேப். கூகிள் மேப் செயலியில் டிரைவிங் ஆப்சனில் ஸ்பீடோமீட்டர் வசதியை ஆன் செய்து வைத்துக் கொண்டால் பயணிக்கும் சாலை ஒவ்வொன்றிலும் அதுவே தூர உச்சவரம்பு எவ்வளவு என்பதை அறிந்து தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உங்கள் வாகனம் குறிப்பிட்ட வேகத்தை தாண்டி சென்றால் ஜிபிஎஸ் மூலம் அதை டிடெக்ட் செய்து அலெர்ட் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

G Maps


இதனால் சாலையில் உச்சவரம்பு வேகத்தை மீறாமல் அபராதம் செலுத்தாமல் நிம்மதியாக வாகனங்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது. இதற்காக சாலைகளில் உள்ள குறியீடுகள், வேகத்தடைகள், வேகக்கட்டுப்பாடு அறிவிப்புகளை கூகிளில் செயற்கை நுண்ணறிவு மூலமாக அப்டேட் செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K