புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (12:13 IST)

8 GB RAM, 64 MP கேமரா..! அட்டகாசமான Lava Blaze X 5G! இந்த நாளில் வாங்கினால் சிறப்பு தள்ளுபடி!

Lava Blaze X 5G

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா நிறுவனம் தனது புதிய Lava Blaze X 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏராளமான நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி வரும் நிலையில் அதற்கு ஈடு கொடுத்து இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவாவும் பல ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அதிகரிக்கப்பட்ட ரேம் செயல்பாடுகள், 5ஜி வசதியுடன் கூடிய தனது புதிய Lava Blaze X 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது லாவா நிறுவனம்

Lava Blaze X 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்

2.4 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்

டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார்

4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம்

128 ஜிபி இண்டெர்னல் மெமரி

64 எம்பி + 2 எம்பி ப்ரைமரி டூவல் சோனி கேமரா

16 எம்பி முன்பக்க செல்பி கேமரா

5000 mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த Lava Blaze X 5G ஸ்மார்ட்போன் டைட்டானியம் க்ரே மற்றும் ஸ்டார்லைட் பர்ப்பிள் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை

4 GB RAM + 128 GB - Rs. 16,999

6 GB RAM + 128 GB - Rs. 17,999

8 GB RAM + 128 GB - Rs. 18,999

இந்த Lava Blaze X 5G ஸ்மார்ட்போன் ஜூலை 20ம் தேதி வெளியாகிறது. இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்கினால் ரூ.2000 + வங்கி (கிரெடிட்+டெபிட்) கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி என மாடலுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

Edit by Prasanth.K