ஜியோ என்ன பண்ணாலும் அண்ணன் கில்லிடா: யாரு என்னனு தெரியுதா?


Sugapriya Prakash| Last Modified சனி, 4 மார்ச் 2017 (11:38 IST)
இன்டெர்நெட் சேவை அளிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை மீண்டும் தக்கவைத்து கொண்டது ஏர்டெல்.

 
 
புகழ்பெற்ற இணைய ஆய்வு நிறுவனம் ஓக்லா (Ookla). இந்நிறுவனத்தின் இணையதளமான ஸ்பீட் டெஸ்ட் Speed Test மிகவும் பிரபலமானது. ஸ்பீட் டெஸ்ட் என்ற மொபைல் அப்ளிகேஷனும் இருக்கிறது. 
 
இந்த அப்ளிகேஷன் மூலம் எந்தவொரு எலக்ட்ரானிக் டிவைசிலும் இணைய வேகத்தை கண்டறிய முடியும். இந்நிறுவனம் சமீபத்தில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் நெட்வொர்க் எதுவென்று அறிவித்துள்ளது.
 
இந்த முடிவில் இந்தியாவில் தலைசிறந்த அதிவேக இன்டர்நெட் சேவையை அளிப்பது ஏர்டெல் என்று கூறியுள்ளது. மொபைல், லேன், வைஃபை போன்ற அனைத்து விதமான இன்டர்நெட் தொழில் நுட்பங்களின் வாயிலாகவும் அளிக்கப்படும் இன்டர்நெட் சேவையின் வேகத்தில் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
அதே போல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட அறிக்கையிலும் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் முதலிடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :