டெஸ்டிங் பிரிவில் மேம்படுத்தப்பட்ட சேவை: காக்னிசன்ட் அறிமுகம்

Webdunia|
தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் காக்னிசன்ட் நிறுவனம், சாஃப்ட்வேர் டெஸ்டிங் (Software testing) பிரிவில் மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்துள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் ஒருவரான பெம்கோ இன்சூரன்ஸ் (PEMCO Insurance) நிறுவன தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குனர் முகமது ஷாஹூர் மேம்படுத்தப்பட்ட டெஸ்டிங் சேவையை அறிமுகப்படுத்தியதாக காக்னிசன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

காக்னிசன்ட் நிறுவனத்தின் டெஸ்டிங் பிராக்டிஸ் பிரிவு உருவாக்கியுள்ள இந்த மேம்படுத்த டெஸ்டிங் சேவையைப் பயன்படுத்தி, தங்களின் புதிய மென்பொருள் தயாரிப்புகளை மிகவும் குறுகிய காலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெஸ்ட் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :