இந்தியாவில் இருந்து அதிக ஸ்பேம்கள்

Webdunia|
கடந்த 3 மாதத்தில் உலகம் முழுவதும் பெறப்பட்ட ஸ்பேம் மின்னஞ்சல்களில் 20 விழுக்காடு இந்தியாவில் இருந்துதான் வருவதாக ஆய்வு கூறுகிறது.

ட்ரெண்ட் மைக்ரோ என்ற பாதுகாப்பு மென்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆய்வொன்றை நடத்தியது. அதில், கடந்த காலாண்டில், ஸ்பேம்களை அனுப்பிய நாடுகள் விவரம் என்று பார்த்தால் இந்தியாவிலிருந்து 20 விழுக்காடும், தென் கொரியாவிலிருந்து 12 விழுக்காடும், ரஷ்யாவில் இருந்து 10 விழுக்காடும் என தெரிய வந்துள்ளது.

முன்பை காட்டிலும், தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள ஆய்வு, ஆண்டிராயிட் செல்பேசிகளை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக 5000 ஆண்டிராய்டை தாக்கும் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டிரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.

இதேப்போன்று, மிகவும் பாதுகாப்பான இயங்குதளமாக கருதப்பட்டு வந்த ஆப்பிள் தற்போது அதிக தாக்குதலுக்கு ஆளாகும் ஒன்றாக மாறிவிட்டது. அடுத்த இலக்கு ஆரக்கிள் உள்ளதாக ஆய்வு முடிவு கூறியுள்ளது.
News Summary:
Twenty per cent of the spam mails that were sent out worldwide in the quarter ended March 31, 2012, originated in India, according to a study by security software firm Trend Micro


இதில் மேலும் படிக்கவும் :