1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:10 IST)

நாயகன் மீண்டும் வறார்.. மர்மங்களை கண்டுபிடிக்க! – இண்டியானா ஜோன்ஸ் 5 ட்ரெய்லர்!

Indiana Jones 5
பிரபலமான இண்டியானா ஜோன்ஸ் பட வரிசையின் ஐந்தாவது பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

புதையல் வேட்டை, பழங்கால மர்மங்களை கண்டுபிடிக்கும் வகை படங்களில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் படம் இண்டியானா ஜோன்ஸ். 1981ல் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடித்து இதன் முதல் பாகமான Indiana Jones: Raiders of the lost ark வெளியானது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த படம் 2008 வரை மொத்தம் 4 பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பாகங்களையுமே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான் இயக்கியிருந்தார். இந்நிலையில் 2023ம் ஆண்டில் இண்டியானா ஜோன்ஸின் 5வது பாகமான Indiana Jones and the dial of destiny படம் வெளியாகிறது. ஹாரிசன் ஃபோர்ட் நடித்திருந்தாலும் இந்த படத்தை மட்டும் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கியுள்ளார்.

இந்த படத்திலும் பழங்கால மர்மங்களையும், புதையல்கள் குறித்து குறிப்பையும் பரபர ஆக்‌ஷனுடன் ஜோன்ஸ் கண்டுபிடிக்கிறார். இந்த படத்தில் பல காட்சிகளில் இளமைக்கால ஹாரிசன் ஃபோர்டை புதிய தொழில்நுட்பங்களை வைத்து திரும்ப கொண்டு வந்துள்ளனர்.
80ஸ், 90ஸ் கிட்ஸ் முதலாக பிரபலமான இந்த இண்டியானா ஜோன்ஸ் படத்தின் இறுதி பாகம் இந்த ஐந்தாம் பாகம் என கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஜூன் 30,2023ல் படம் ரிலீஸாக உள்ளது.

Edit By Prasanth.K