திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By siva
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (16:51 IST)

’ஜோக்கர் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி!

Joker
ஹாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ஜோக்கர் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹாலிவுட் பட ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் பாகம் போலவே இரண்டாம் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது